/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்
/
முன்னாள் கவர்னர் தமிழிசை கடலுார் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஆக 08, 2025 02:34 AM

கடலுார்: முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடலுார் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ., மாநில தலைவராக பதவி வகித்தார்.
அப்போது, கடலுாரை சேர்ந்த வி.சி., பிரமுகர் பாலபுதியவன் என்பவர், தமிழிசை போட்டோவை முகநுாலில் பதிவு செய்து ஆபாச கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ., முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பாலபுதியவனை கைது செய்தனர். மேலும், அவர் மீது கடலுார் கூடுதல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த னர்.
இவ்வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஸ்ரீவர்ஷா முன்னிலையில், தமிழிசை ஆஜராகி சாட்சியம் அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் இந்திரா ஆஜரானார்.