/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
/
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ADDED : நவ 20, 2024 05:40 AM
விருத்தாசலம் : 'வரி பங்கீடு குறித்த தி.மு.க.,வின் பேச்சு, ஊரை ஏமாற்றும் வேலை' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிதியை பொறுத்தவரை இன்கம் டேக்ஸ், கார்ப்பரேட் இன்கம் டேக்ஸ், கஸ்டம்ஸ் டியூட்டி ஆகியவற்றில் குறைவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு நிதியை பெருக்க அதிக வசதி உள்ளது.
வரி பகிர்வில், 100 ரூபாயில் மாநில அரசுக்கு 41 சதவீதம், மத்திய அரசு 59 சதவீதம் எடுத்துக் கொள்ளும். ஆனால், 41 சதவீதத்தை பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்குகிறார்கள்.
உ.பி.,க்கு 17.5 சதவீதம், தமிழகத்துக்கு 4.7 சதவீதம் என பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகின்றனர். இதனை சமச்சீராக்க வேண்டும் என்று நேற்று நேரில் சென்று நிதிக்குழுவிடம் வலியுறுத்தினோம். 41 சதவீதத்தை 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என கூறினோம்.
குறித்து பேச தி.மு.க., வுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க., அந்த காலக்கட்டத்தில் வரி பகிர்வை 50 சதவீதமாக மாற்றியிருக்கலாம். ஆனால், நேற்று 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என கேட்கின்றனர். இது ஊரை ஏமாற்றும் வேலை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி வழங்க வேண்டும்.
பேரிடர் காலத்தில் தற்காலிக நிதி போதாது; நிரந்தரமாக மறு சீரமைப்பு, குடியமர்வு, மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என நிதிக்குழு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
நடிகர் விஜயுடன் கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

