/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 'மாஜி' அமைச்சர் பங்கேற்பு
/
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 'மாஜி' அமைச்சர் பங்கேற்பு
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 'மாஜி' அமைச்சர் பங்கேற்பு
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 'மாஜி' அமைச்சர் பங்கேற்பு
ADDED : மே 09, 2025 03:37 AM

கடலுார்: முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென, முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
கடலுார் பாதிரிக்குப்பம் அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மீனவரணி தங்கமணி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சம்பத் பேசுகையில், 'முன்னாள் முதல்வர் பழனிசாமி 71வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 11ம் தேதி கடலுார் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்து சிறப்பாக கொண்டாட வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது' என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மருத்துவர் அணி சீனுவாச ராஜா, ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஜெ.,பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், கார்த்திக், பகுதி செயலாளர்கள், கந்தன், கார்த்திக்கேயன், மாதவன், கந்தன், பாலகிருஷ்ணன் மற்றும் ஏழுமலை, தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.