/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் 'மாஜி' அமைச்சர் சம்பத் துவக்கி வைப்பு
/
அ.தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் 'மாஜி' அமைச்சர் சம்பத் துவக்கி வைப்பு
அ.தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் 'மாஜி' அமைச்சர் சம்பத் துவக்கி வைப்பு
அ.தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் 'மாஜி' அமைச்சர் சம்பத் துவக்கி வைப்பு
ADDED : மே 13, 2025 06:59 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் நடந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழாவில் ரத்த தான முகாமை முன்னாள் அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார்.
பண்ருட்டியில் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி ரத்த தான முகாம் நடந்தது. நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ராஜதுரை வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் சம்பத் முகாமை துவக்கி வைத்தார். கடலுார் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கதிரவன் தலைமையிலான 11 பேர் அடங்கிய மருத்துவர் குழுவினர் 71 பேரிடம் ரத்தம் தானமாக பெற்றனர்.
நிகழ்ச்சியில் ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், முன்னாள் எம்.எல்.சி.,சிவராமன், ஒன்றிய செயலாளர்கள் நாகபூஷணம், தமிழ்செல்வன், சிவா, மேல்பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் அர்ச்சுனன், தொரப்பாடி பேரூர் செயலர் சுரேஷ், பேரவை செயலாளர் செல்வம், பொருளாளர் முருகன், இணை செயலாளர் சத்யா கலைமணி, துணை செயலாளர் உமாமகேஸ்வரி ஸ்ரீதர், துணை செயலாளர் ரகுபதி, மாவட்ட பிரதிநிதி சீனுவாசன், மாவட்ட பிரதிநிதி சர்புன்னிசா சலாவுதீன், முன்னாள் தர்கா கமிட்டி தலைவர் இஸ்மாயில், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிசந்திரன், கார்த்திக், நகர இளைஞரணி செயலாளர் கருணாமூர்த்தி, வக்கீல் கோபாலகிருஷ்ணன், பேரவை துணை செயலாளர் வெங்கடேசன், வர்த்தக அணி பாஸ்கர், எம்.ஜி.ஆர்., மன்றம் பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ஆதி, மாவட்ட மாணவரணி ராஜேஷ், மாணவரணி பொருளாளர் சரத், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முரளி, மாவட்ட அணி சாரா தலைவர் சதீஷ்குமார், மாவட்ட விவசாய பிரிவு மணிவண்ணன், ஓட்டுனர் அணி காந்தி ராமசந்திரன், பாசறை செயலாளர் குமார், நகர இளைஞரணி துணை செயலாளர் சந்துரு, லோகு, சதீஷ்குமார, பிரகாஷ், வார்டு செயலாளர்கள் பக்கிரி, உலகநாதன், ராஜேஷ், சீனுவாசன், நகராட்சி கவுன் சிலர்கள் சுவாதி பாக்கியராஜ், வெங்கடேசன், முருகன். உட்பட பலர் பங்கேற்றனர்.