/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
/
த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
ADDED : மே 29, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
த.மா.கா., கடலுார் தெற்கு மாவட்ட தலைவராக இருந்தவர் புரட்சிமணி, 59; கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தை சேர்ந்தவர். மூப்பனார் தலைமையிலான த.மா.கா., சார்பில், மங்களூர் தொகுதியில் 1996 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார். அதற்கு முன்பு, 1991ல் அதே தொகுதியில் காங்., கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
இந்நிலையில், அவர் உடல்நலக் குறைவால் நேற்று இறந்தார். அவருக்கு மீனா என்ற மனைவியும், டாக்டர் புவனேஷ் என்ற மகன், டாக்டர் இந்திரா என்ற மகள் உள்ளனர்.
அவரது இறப்பிற்கு, த.மா.கா., தலைவர் வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.