/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் முப்படை தளபதி நினைவு தினம்
/
முன்னாள் முப்படை தளபதி நினைவு தினம்
ADDED : டிச 10, 2024 05:57 AM

கடலுார்; கடலுாரில், முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில், முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் தலைவர் பாபு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் வள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு, முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் பன்னீர்செல்வம், பாலகுரு, ராமதாஸ், மத்திய வருமான வரி ஆய்வாளர் அரவிந்த், சாரல் அமைப்பு தலைவர் சங்கர், நிர்வாகிகள் வெங்கடேஷ், ஆர்யா, பள்ளி மாணவர்கள் ஜீவிதன், பவன் பாலசிங்கம் பங்கேற்றனர்.

