/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளையில் நாடக மேடைக்கு அடிக்கல்
/
கிள்ளையில் நாடக மேடைக்கு அடிக்கல்
ADDED : நவ 02, 2025 11:51 PM

கிள்ளை: கிள்ளை பில்லுமேடு பகுதியில், சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.7 லட்சம் மதிப்பில், புதியதாக நாடக மேடை அமைக்க நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கிள்ளை நகர அ.தி.மு.க., செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி வரவேற்றார். நாடக மேடை அமைக்க, பாண்டியன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.
விழாவில், மீனவரணி துணை செயலாளர் அன்பு ஜீவா, இணை செயலாளர் மணிமாறன், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், கிள்ளை கிராம கமிட்டி அ.தி.மு.க., தலைவர் செந்தில்குமார், நகர இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் ரமேஷ், சிவராஜன், பொன்னுசாமி, தென்றல்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிராம தலைவர் மாயவன், நன்றி கூறினார்.

