/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.18 கோடியில் புதிய கோர்ட் கட்டடம்; நெய்வேலியில் அடிக்கல் நாட்டல்
/
ரூ.18 கோடியில் புதிய கோர்ட் கட்டடம்; நெய்வேலியில் அடிக்கல் நாட்டல்
ரூ.18 கோடியில் புதிய கோர்ட் கட்டடம்; நெய்வேலியில் அடிக்கல் நாட்டல்
ரூ.18 கோடியில் புதிய கோர்ட் கட்டடம்; நெய்வேலியில் அடிக்கல் நாட்டல்
ADDED : டிச 12, 2024 07:57 AM

நெய்வேலி; நெய்வேலியில் ரூ. 18 கோடி செலவில் புதிய கோர்ட் கட்டடம் கட்ட அடிக்கால் நாட்டப்பட்டது.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20 ல் செயல்பட்டுவந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், இந்திரா நகர் ஊராட்சியில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
அதற்காக, ரூ. 18 கோடியில் புதிய கட்டடம் கட்டுப்படுகிறது. அதற்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜவகர், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அடிக்கல் நாட்டினர்.
புதிதாக அமைய உள்ள கோர்ட் வளாகத்தில் நீதிமன்ற அலுவலர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம், வழக்கறிஞர் அறை, நுாலகம் உள்ளிட்டவை அமைகிறது.
நிகழ்ச்சியில் முதன்மை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நாகராஜன், நெய்வேலி முதன்மை அமர்வு நீதிபதி உமா மகேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரவீன் குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் பரிமளா, பட்டு வளர்ச்சி துறை இளையராஜா, பண்ருட்டி ஒன்றிய சேர்மன் பாலமுருகன், இந்திரா நகர் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஞானப்பண்டிதன், செயலாளர் தேவசுந்தரி, பொருளாளர் சிவகண்டன், துணைத் தலைவர் அன்பரசன், துணை செயலாளர் பிரேம்குமார், அரசு வழக்கறிஞர்கள் சிலம்பரசன், ஹரிதாஸ், ஒப்பந்ததாரர் ரங்கநாதன் பங்கேற்றனர்.