/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலையரங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
/
கலையரங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : அக் 31, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுாரில் புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, அ.தி.மு.க.. எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கி பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார்.
கடலுார் கிழக்கு மாவட் ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம், மேற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில துணைச் செயலாளர் அருளழகன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், சீனிவாசன், அவைத் தலைவர் செல்வராசு, ஒன்றிய பொருளாளர் சங்கர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

