ADDED : அக் 31, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் தண்டேஸ்வரநல்லுார் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
முகாமிற்கு, குமராட்சி பி.டி.ஓ., இப்ராஹிம் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். முகாமில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி, ஊராட்சி செயலர்கள் வேலு, பாபு, இளமுருகு, பூவராகன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பரந்தாமன், குட்டிமணி ஜெகன், பாலகுரு, பாண்டியன், ரத்தினசாமி, சண்முகசுந்தரம், பாலசுப்ரமணியம், மாயகிருஷ்ணன், மாரிமுத்து, மாரியப்பன், மதியழகன், அம்பிகாபதி, முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

