/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : அக் 31, 2025 02:44 AM

கடலுார்:  வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை, கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் தில்லை நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர்,43. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு  விருத்தாசலம் அடுத்த மேல்பாதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன்,36, என்பவர் அறிமுகமானார். அவர் தனது மாமனார் நெய்வேலி  என்.எல்.சி.,யில் வேலை செய்வதாகவும், அவர் என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்துள்ளதால் அதற்காக கிடைக்கும் வேலையை  பிரபுசங்கருக்கு  வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
என்.எல்.சி.,யில் வேலை வாங்க 20 லட்சம் ரூபாய் செலவாகும், அதனால் முன்பணமாக 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். பிரபுசங்கரும், மணிகண்டன்  கேட்ட 5 லட்சம் ரூபாயை கொடுத்தார். அதன்பின் சில வாரங்களுக்கு பிறகு வேலை கிடைத்துவிட்டது என மணிகண்டன்  கூறியதை நம்பி ஜி-பே மூலம் 2 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.
இதேபோல் சிதம்பரத்தை சேர்ந்த  தனகோபால் மகன் ராஜசேகர் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய், நடராஜன் மகன் ஹரிபிரசாத் என்பவரிடம் 8 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மணிகண்டன் வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்  பேரில் கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.

