/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார மையத்திற்கு அடிக்கல் நாட்டல்
/
சுகாதார மையத்திற்கு அடிக்கல் நாட்டல்
ADDED : மார் 14, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே துணை சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம் ஊராட்சியில், துணை சுகாதார நிலையம் கட்ட அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மதனகோபாலபுரம் ஊராட்சி தலைவர் ராஜ்குமார், புலியூர் காட்டுசாகை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சகானா, பகுதி சுகாதார செவிலியர் விஜயா, கிராம சுகாதார செவிலியர் பரிமளா, சுகாதார ஆய்வாளர் சுகன் மற்றும், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

