ADDED : டிச 22, 2024 09:30 AM
கடலுார் : கடலுாரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நான்கு பேரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கடலுார் அடுத்த கே.என்.பேட்டை பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கீற்று கொட்டகையில் கஞ்சா பொட்டலங்களுடன் நான்கு பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
விசாரணையில் அவர்கள் கே.என்.பேட்டையை சேர்ந்த ராஜேஷ்,26, தேவநாதன்,24, அஜித்குமார்,26, கமல்கார்த்திக்,20, என தெரிந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 12ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.