/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளையடிக்க திட்டம் நான்கு பேர் கைது
/
கொள்ளையடிக்க திட்டம் நான்கு பேர் கைது
ADDED : அக் 24, 2024 06:38 AM
கடலுார்: கடலுார் அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் கே.என்.பேட்டை பகுதியில் திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில்
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யனார் கோவில் ஏரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிறுந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், கடலுார் கே.என்.பேட்டையை சேர்ந்த தேவா, 24, சபரிநாதன், 29, பாதிரிகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன்,24, சந்துரு,22, மற்றும் அஜித் என்பதும், ஐந்துபேரும் அப்பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இதில் அஜித் தப்பியோடிய நிலையில் தேவா, சபரிநாதன், மணிகண்டன், சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

