ADDED : பிப் 01, 2024 06:09 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இரு வார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம், இன்று துவங்குகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கோழிக்கழிச்சல் நோயால் கோழிகள் இறக்கும். இந்நோய் ஒரு கோழியை தாக்கும்போது அது வேகமாக மற்ற கோழிகளுக்கும் பரவி மிகுந்த இழப்பை ஏற்படுத்தும்.
எனவே, இந்நோயை தடுக்க கடலுார் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம், இன்று (1ம் தேதி) முதல் 14 வரையில், இருவார தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
கடலுார் மாவட்டத்திற்கு குறியீடாக 1 லட்சத்து 40 ஆயிரம் கோழிகளுக்கு போடப்பட உள்ளது. அதையொட்டி, அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் தடுப்பூசி மருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
முகாமை கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் மூலம் குறிப்பிட்ட கிராமங்களில் நடத்திட உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தடுப்பூசி பணி மேற்கொள்ளும் போது தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.