ADDED : நவ 19, 2025 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: ஏல சீட்டு பணம் தரா மல் ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் நேரு நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜீவா. இவர் ஏல சீட்டு நடத்தி வருகிறார்.
இவரிடம், சிதம்பரம் வ.உ.சி., தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி சிவகாமி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத தவணையில் மொத்தம் ரூ.1.5 லட்சம் சீட்டு பணம் கட்டினார். சீட்டு முடிந்து, பணம் திருப்பி தராமல் ஜீவா ஏமாற்றி வந்தார்.
இது குறித்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

