நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறி, 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார், முதுநகரை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி உமாராணி, 45, இவர் வடக்கு மண்டல ஐ.ஜி.,யிடம் அளித்த புகாரில், திருச்சோபுரத்தை சேர்ந்த அனிதா, 35, என்பவர், தன் ரத்த பரிசோதனைக் கூடத்தை விரிவாக்கம் செய்து, பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 51 லட்சம் ரூபாய் வாங்கினார்.
பணத்தையும் தராமல், பங்குதாரராகவும் சேர்த்து கொள்ளாமல் மோசடி செய்தார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் என்னை மிரட்டுகிறார், என கூறியிருந்தார். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், அனிதாவை நேற்று கைது செய்தனர்.

