ADDED : நவ 21, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு விலை யில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், தலைமை ஆசிரியர் எல்லப்பன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராம மூர்த்தி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

