ADDED : டிச 22, 2025 05:48 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் இலவச இருதய மருத்துவ முகாம் நடந்தது.
சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர், மலர் அடையார் மருத்துவமனை மற்றும் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சார்பில் நடந்த முகாமில், கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார்.
முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிர்வாக அலுவலர் கோகுலக்கண்ணன், மேலாளர் விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர், அடையார் மலர் மருத்துவமனை இருதய தலைமை டாக்டர் மதன்மோகன் தலைமையிலான, மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு அடிப்படை பரிசோதனை, மருத்துவ குறிப்புகள், இ.சி.ஜி., எக்கோ போன்ற சிகிச்சைகளை வழங்கினர்.
உதவி பேராசிரியர் மலர்மன்னன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபு நன்றி கூறினார்.

