/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.ஐ., பணி எழுத்துத்தேர்வு: 2,172 பேர் 'ஆப்சென்ட்'
/
எஸ்.ஐ., பணி எழுத்துத்தேர்வு: 2,172 பேர் 'ஆப்சென்ட்'
எஸ்.ஐ., பணி எழுத்துத்தேர்வு: 2,172 பேர் 'ஆப்சென்ட்'
எஸ்.ஐ., பணி எழுத்துத்தேர்வு: 2,172 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : டிச 22, 2025 05:48 AM

கடலுார்: எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், எஸ்.ஐ., பணியிடங்களுக்கான நேரடி (தாலுகா மற்றும் ஆயுதப்படை) எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.
இந்த தேர்விற்கு, கடலுார் மாவட்டத்தில், 5,368 பேர் ஆண்கள்; 1,860 பேர் பெண்கள்; என மொத்தம் 7228 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி உள்ளிட்ட, 7 தேர்வு மையங்களில் நடந்தது.
இந்த தேர்வில், தேர்வு நுழைவுச்சீட்டு, அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கருப்பு மை பேனா, ஆகியவற்றை தீவிர சோதனைக்கு பின் போலீசார் அனுமதித்தனர்.
இந்த மையங்களில், எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பிற்பகலிலும் எழுத்து தேர்வு நடந்ததால், தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதுபவர்களுக்கு மதிய உணவு அந்தந்த தேர்வு மையங்களில், பணம் கொடுத்து உணவு பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த தேர்வில் 2,172 பேர் தேர்வில் 'ஆப்சென்ட்' ஆகினர்.

