/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
/
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
ADDED : மார் 17, 2025 08:58 AM
கடலுார்,: பொது நுாலகத் துறை சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.
பயிற்சி வகுப்பை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்து கூறுகையில், 'போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மைய நுாலகத்தில் அனைத்து தகவல்களையும் இணையதளம் வழியாக எளிதாக பெற முடிகிறது.
அவற்றை சரியான முறையில் கையாண்டு முழு முயற்சியுடன் படித்து இலக்கினை அடைய வேண்டும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது இருக்கக்கூடிய அதே உத்வேகத்துடன் பணியில் சேர்ந்து சமுதாயத்திற்கு பணியாற்றும் போதும் இருக்க வேண்டும்.
அரசின் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்திடும் வகையில் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் நடத்தப்படும் இவ்வகுப்பினை இளைஞர்கள் நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கென எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் அனு, மாவட்ட நுாலக அலுவலர் முருகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.