/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்கம்
/
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்கம்
ADDED : ஜூலை 23, 2011 11:38 PM
கிள்ளை : சிதம்பரம் அருகே கிள்ளையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
சிதம்பரம் அருகே கிள்ளை பட்டறையடி ஜீவரத்தினம் அரங்கில் துவங்கிய நிகழ்ச்சியில் முகாம் கண்காணிப்பாளர் செழியன் வரவேற்றார். ஆலோசகர்கள் மலையரசன், முத்துராஜ கோபால் அருணகிரி முன்னிலை வகித்தனர். இலவச பயிற்சி வகுப்பை சென்னை பிளாண்ட் தொண்டு நிறுவன இயக்குனர் வக்கில் ஜான்சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் ஆன்ரோ ஆகியோர் இலவசமாக கம்ப்யூட்டர்களை வழங்கி இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தனர். பயிற்சியாளர் கிரிஜா முருகவேல் பயிற்சியளித்து வருகிறார். விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் மற்ற நாட்களில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

