ADDED : நவ 19, 2025 07:58 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், விருத்தாசலம் அரிமா சங்கம் ஹோஸ்ட், ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி, கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன சார்பில், 102வது இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு, அரிமா சங்க தலைவர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார்.
� ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் துணை ஆளுனர் கனகதாரன், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முகாமினை துவக்கி வைத்தனர்.
மண்டல தலைவர் விஷால் ஜெயின், மாவட்ட தலைவர் சிவகாந்தன் வாழ்த்துரை வழங்கினர்.
செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில், சுப்ரமணியன், சாமுண்டீஸ்வரி, கரியப்பா, வசந்தராஜ், ஜெயவேல், சுந்தரவடிவேல், காஸ்போபாலிட்டன் ராமுலு, முத்து நாராயணன், பொறியாளர் ரஞ்சித், தமிழ்மணி, ஸ்ரீதர், சேட்டு முகம்மது, ஜெய்சந்த், சுந்தர்ராஜ், குமரேசன், சந்திரசேகர், விஸ்வநாதன், ராஜகோபால், பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பொருளாளர் பாலு நன்றி கூறினார்.

