/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச மனைப்பட்டா கூவி கூவி விற்பனையா
/
இலவச மனைப்பட்டா கூவி கூவி விற்பனையா
ADDED : ஜன 17, 2024 02:12 AM
கடலுார் மாவட்டத்தின் கடைகோடி பகுதியிலுள்ள தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுமனை இல்லாத மலைக்குறவர் இன மக்களுக்கு மனைப்பட்டா வழங்க நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அங்கு, 250க்கும் மேற்பட்ட மனைப்பட்டாக்கள் பிரிக்கப்பட்டு, 200 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் வீடு கட்டி குடியேறினர்.
வீடுகட்டாமல் இருந்த ஏழைகளிடம், அதே பகுதியை சேர்ந்த சிலர் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை 10 ஆயிரம், 20ஆயிரம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே, கொண்டு வந்தனர்.
தற்போது அந்த இடத்தை தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசி வருவது புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மனைப்பட்டா வழங்காமல் காலியாக உள்ள இடங்களை வெளி மாவட்டத்தை சேர்ந்த சிலருக்கு பட்டா வழங்க ரூ.2லட்சம் முதல் 3 லட்சம் வரையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களே பேரம் பேசி வருவதாக தெரிகிறது.
இந்த தகவல் கசிய துவங்கி, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது,
ஏழை மக்களுக்காக வழங்கப்பட்ட இடத்தை, முறைகேடாக வாங்கியவர்களிடம் இருந்து மீட்டு தகுதியுடைய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விற்பனை செய்ய நடக்கும் பேரத்தை தடுத்து நிறுத்தவும் கலெக்டர் வரையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்னை பூதாகரமாகி வருகிறது.

