ADDED : பிப் 28, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் டி.சி.ஓ.ஏ., பப்ளிக் பவுண்டேஷன், புதுச்சேரி லட்சுமி நாராயண மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
டி.சி.சி.எல்.,12ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நடந்த முகாமிற்கு, மாவட்ட தலைவர் கதிர்காமன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார். தலைமை நிலையச் செயலாளர் அப்சர் முகாமை துவக்கி வைத்தார்.
முாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள், 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். வர்த்தக சங்கச் செயலாளர் ராமலிங்கம், உயர்மட்டக் குழு உறுப்பினர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

