ADDED : நவ 19, 2025 08:01 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து சான்றிதழ் மற்றும் இலவச தையல் மெஷின் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைவர் ராஜா ஜூவல்லரி உரிமையாளர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் அசோக்குமார், பொருளாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தையல் ஆசிரியர் அபிநயா வரவேற்றார்.
கும்பகோணம் தலைவர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இலவச தையல் மிஷின்களை வழங்கினார்.
இதில் வழக்கறிஞர் விஸ்வேஸ்வரன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
இதில், நிர்வாகிகள் ஆசைத்தம்பி, கிருஷ்ணன், ஹரி ராமன், வெங்கடேசன், பெரியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

