sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அடிக்கடி பழுதாகும் மகளிர் டவுன் பஸ் பயணிகள் 'தொடர்' அவதி

/

 அடிக்கடி பழுதாகும் மகளிர் டவுன் பஸ் பயணிகள் 'தொடர்' அவதி

 அடிக்கடி பழுதாகும் மகளிர் டவுன் பஸ் பயணிகள் 'தொடர்' அவதி

 அடிக்கடி பழுதாகும் மகளிர் டவுன் பஸ் பயணிகள் 'தொடர்' அவதி


ADDED : டிச 15, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மகளிர் கட்டணமில்லா டவுன் பஸ்கள் அடிக்கடி பழுதாவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் மகளிருக் கு கட்டணமில்லா டவுன் பஸ்கள் இயக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, கட்டணமில்லா டவுன் பஸ்களுக்கு பிங்க் நிற வண்ணம் பூசி, மகளிர் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் நிறம் மாற்றப்பட்டது. இவ்வகை டவுன் பஸ்கள் பெரும்பாலும் பழுதாகி, ஆங்காங்கே கேட்பாரற்று நிற்பது வாடிக்கையாகி விட்டது.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2:30 மணியளவில், சேப்பாக்கம் டவுன் பஸ், தடம் எண்.22 புறப்பட்டது. இந்த பஸ் மணவாளநல்லுார், கோமங்கலம், பரவளூர், மேமாத்துார், வண்ணாங்குடிகாடு, நல்லுார் வழியாக சேப்பாக்கம் வரை செல்ல வேண்டும்.

ஆனால், கியர் ராடு கட்டாகி, விருத்தாசலம் நகர எல்லையில், மணலுார் ரயில்வே மேம்பாலத்தை கடக்கும் போது பழுதானது.

மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிய பஸ், 100 மீ., தொலைவில் தனியார் மதுபானக்கூடம் அருகே இயங்க முடியாமல் நின்றது.

தகவலறிந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஊழியர்கள் வந்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாலை 3:20 மணி வரை பழுது நீக்க முடியாததால், பயணிகள் 45 நிமிடங்களாக காத்திருந்து, மாற்று பஸ்சில் ஏறி சென்றனர்.

மகளிர் கட்டணமில்லா பஸ் என குறிப்பிட்ட வழித்தடங்களில் புதிதாக பஸ் இயக்கப்பட்ட நிலையில், பல்வேறு கிராமங்களை இணைக்கும் சேப்பாக்கம் மார்க்கத்திற்கு புதிதாக பஸ் இயக்க வேண்டும். பழுதான டவுன் பஸ்சை இயக்கி, கட்டணமில்லா பஸ் என்ற பெயரில் அரசுக்கு அவப்பெயரே ஏற்படும் என பயணிகள் புலம்பிச் சென்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வந்த கட்டணமில்லா மகளிர் பஸ், வயலுார் ரயில்வே மேம்பாலம் அருகே இன்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் நிறுத்தப்பட்டது. பயணிகள் மாற்று பஸ்சில் சென்றனர்.

கட்டணமில்லாத பயணம் என்பதால், பழுதான அல்லது கண்டமான பஸ்களை இயக்கி பயணிகளின் நேரத்தை வீணடிப்பதுடன், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதனால், விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள், பிங்க் நிற டவுன் பஸ்களில் பழுதுகளை துரிதமாக நீக்கி, அந்தந்த வழித்தடத்தில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us