UPDATED : நவ 07, 2026 03:08 PM
ADDED : நவ 07, 2026 03:06 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்.நவ. 8-
நெல்லிக்குப்பம் அரிமா சங்கமும் ரோஸ் கண்ணன் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நகராட்சியில் பணியாற்றும் 75 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் ரவிசங்கர், அரிமா செயலாளர் ராமலிங்கம், நகராட்சி மேலாளர் கருணாகரன் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அரிமா தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீதர், கார்த்தி, நிர்வாகிகள் ஆசாத் கருணா,சேகர், ஜெகத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
