/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' துவங்கியது
/
கடலுாரில் 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' துவங்கியது
ADDED : அக் 12, 2024 05:44 AM

கடலுார்: கடலுாரில், முதன்முறையாக நேற்று துவங்கிய, மாபெரும் 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' கிருஷ்ணசாமி கல்வி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கடலூரில், முதல் முறையாக, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாபெரும் 'பர்னிச்சர் எக்ஸ்போ 2024' நேற்று துவங்கியது. கடலுார் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள, சுபலட்சுமி திருமண மண்டபத்தில் துவங்கிய பர்னிச்சர் எஸ்போவை, கடலுார் கிருஷ்ணசாமி கல்வி நிறுவனத்தின், முதல்வர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் அஜ்மல் மற்றும் சமீர் செயலாளர் ஜவகர் முன்னிலை வகித்தனர்.
மேலும், பர்னிச்சர் எக்ஸ்போ குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறுகையில், 15ம் தேதி வரை நடைபெறும் இந்த பர்னிச்சர் எக்ஸ்போவில், நிலம்பூர் டீக்வுட் கட்டில், சோபா, டைனிங், டில்லி லக்சுரி குஷன் சோபா, கம்பெட், ரிக்ளைனர் சோபா, பங்கர் காட், பெட்ரூம் செட் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும், நேரடி உற்பத்தி விலையில், 30 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றார்.