ADDED : நவ 02, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: காசு வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது செல்வராஜ், முந்திரி தோப்பில் சூதாட்டம் நடப்பதாக, கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு காசு வைத்து சூதாடிய, சி.என்.பாளையம் சூரியன், 44; தட்சணாமூர்த்தி,45; பாலசுந்தரம்,36; பிரதாப்,23; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

