ADDED : அக் 03, 2025 01:42 AM

நெய்வேலி: நெய்வேலியில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
சுரங்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குநர் வெங்கடாச்சலம், என்.எல்.சி. விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
காந்தி சிலைக்கு என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மாலை அணிவித்து பேசினார். தொடர்ந்து, ஜவஹர் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
விழாவின் ஒரு பகுதியாக நெய்வேலி முழுதும் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. நெய்வேலி மகளிர் மன்றத் தலைவர் ராதிகா பிரசன்னகுமார், மகளிர் மன்ற பொறுப்பாளர்களுடன் இணைந்து, என்.எல்.சி., பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினார்.
தொடர்ந்து, நெய்வேலி வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.