/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி அலுவலகங்கள் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
ஊராட்சி அலுவலகங்கள் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : அக் 03, 2025 01:43 AM

நெய்வேலி: நெய்வேலி அடுத்த காட்டுக்கூடலுார், மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சிகளில், புதிய ஊராட்சி அலுவலகங்களை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நெய்வேலி தொகுதி, காட்டுக்கூடலுார் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் 28.10 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலும் ஊராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஊராட்சி அலுவலகங்களையும் திறந்து வைத்தார். பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், முன்னாள் ஊராட்சி தலைவர் பாரி, முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகர், அருள்முருகன், பாலசண்முகம், மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.