ADDED : பிப் 01, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் காந்தி மன்றத்தில், காந்தி நினைவு தினத்தையொட்டி, சர்வ சமயப் பிரார்த்தனை நடந்தது.
காந்தி மன்ற தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரார்த்தனையில் திருக்குறள், பகவத் கீதை, திருக்குறான், பைபிள் ஆகியவற்றில் இருந்து பாடல்கள் இடம் பெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் இன்னர்வீல் சங்கத் தலைவர் நாச்சம்மை பரிசு வழங்கினார்.
பேராசிரியர் நடனசபாபதி, ராம்குமார், காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் கஸ்தூரி, துணை முதல்வர் ரமேஷ், சிவராமசேது, கலியபெருமாள், வனஜா தில்லைநாயகம் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழரசி சேகர் நன்றி கூறினார்.