ADDED : ஜூலை 09, 2026 04:08 AM

அ நிறம் | அளவு
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள், கணேசன் எம்.எல்.ஏ., பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கழுதுார், வெங்கடேஸ்வரா கல்லுாரி வளாகத்தில், கணேசன் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அவரை சந்தித்த மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமையிலான நிர்வாகிகள், அவருக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், ராஜசேகர், ஞான சவுந்தரி, சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
