ADDED : டிச 17, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில், ஆரத்தி பூஜைகள் நடந்தது.
இந்துக்கள் ஆறுகளை தெய்வமாக வழிபடுவது வழக்கமாக உள்ளது. காசியில் தினமும் கங்கை நதிக்கு கங்கா ஆரத்தி பூஜைகள் நடக்கிறது.
அதேபோல் நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் 2ம் ஆண்டாக ஆரத்தி பூஜைகள் நடந்தது. மாலை 3:00 மணிக்கு அங்குள்ள விஸ்வநாதபுரீஸ்வரருக்கு சிவ வாத்தியம் முழங்க அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெண்ணையாற்றில் கங்கா ஆரத்தி பூஜைகள் நடந்தது.
பூஜைகளை சேனாபதி குருக்கள் தலைமையில் 5 குருக்கள்கள் செய்தனர். ராஜசேகரன், அம்சா பாஸ்கரன், ஜனார்த்தனன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தமிழ் முதல் தேதி ஆலய வழிபாட்டு குழுவினர், புண்ணியர் பேரவை ஆன்மிக அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

