ADDED : ஆக 08, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்,: பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ் பெக்டர் பாக்கிய ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சோழன் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பி டித்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் விஜய், 19; ஆதிமூலம் மகன் கேசவன் (எ) அரசு, 20; என்பதும், கஞ்சா பதுக்கியதும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 30 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.