/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பையில் உரம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில்
/
குப்பையில் உரம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில்
ADDED : மே 31, 2025 05:16 AM

நெல்லிக்குப்பம : நெல்லிக்குப்பம் நகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை பல ஆண்டுகளாக திருக்குளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமானதால் குப்பை மக்காமல் மலைபோல் குவிந்தது.
இதையடுத்து திருக்குளம் பகுதியில் மக்கும் குப்பை; மக்காத குப்பையாக தரம் பிரித்து சுத்தம் செய்து கொள்ள தனியார் நிறுவனத்துக்கு 72 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக குப்பையை கொட்ட முடியவில்லை.
இதற்கிடையே, சரவணபுரத்தில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க 1 கோடி ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் வாங்கி பணிகள் நடந்தது. ஆனால், தற்போது, உரம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால், நகரப் பகுதி சுகாதாரமற்ற நிலைக்கு மாறி வருகிறது. எனவே, இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.