/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பை கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு
/
குப்பை கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு
ADDED : அக் 12, 2025 11:49 PM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேரும் குப்பையை ஆற்றில் கொட்டிய வாகனத்தை மக்கள் சிறைபிடித்தனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை பல ஆண்டுகளாக திருக்குளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர்.பிளாஸ்டிக் பைகள் அதிகமானதால் குப்பை மக்காமல் மலைபோல் குவிந்தது.15 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையை தரம் பிரித்து உரமாக்கும் திட்டத்துக்காக மேல்பாதியில் இடம் வாங்கினர்.
அங்கு 80 லட்சம் செலவில் சிமண்ட் களம் தண்ணீர் வசதி செய்தனர்.அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு நாள் கூட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவில்லை.திருக்குளம் குப்பை கிடங்கை சுத்தம் செய்து பூங்காவாக மாற்றும் பணி நடப்பதால் அங்கும் குப்பையை சேகரிக்க முடிகயவில்லை.
இதனால் குப்பையை பெண்ணையாற்றின் கரையில் கொட்டுகின்றனர்.நேற்று ஆற்றின் கரையில் குப்பையை கொட்ட சென்ற வாகனத்தை மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.இனி இங்கு குப்பையை கொட்ட மாட்டோம் என டிரைவர்கள் கூறியதையேற்று வாகனத்தை விடுவித்தனர்.
அதிகாரிகள் அலட்சியத்தால் நெல்லிக்குப்பம் சுகாதாரமற்ற நகரமாக மாறி வருகிறது.