ADDED : நவ 12, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை பல ஆண்டுகளாக திருக்குளத்தில் உள்ள குப்பை கிடங்கில் சேமித்து வந்தனர்.
குப்பையை தரம் பிரித்து அகற்றும் பணி நடப்பதால் அங்கு சேமிக்க முடியவில்லை. மேல்பாதியில் உள்ள இடத்திலும் மக்கள் எதிர்ப்பால் குப்பையை சேமிக்க முடியவில்லை.
சரவணபுரம் சாலையில் குப்பையை மலை போல் குவித்து வந்தனர். இதனால் சமீபத்தில், அங்கு குப்பை கொட்ட சென்ற, 3 வாகனங்களை மக்கள் சிறை பிடித்தனர்.
அதிகாரிகள் இனி அங்கு குப்பை கொட்ட மாட்டோம் என உறுதியளித்ததை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பின், வாகனங்களை விடுவித்தனர்.

