ADDED : நவ 12, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் பஸ் டிரைவர் இறந்தார்.
கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,40; தனியார் பஸ் டிரைவர். இவர், ராமாபுரம் புதிய பைபாஸ் வழியாக நேற்று பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

