/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரும்பு கம்பி திருட்டு போலீஸ் விசாரணை
/
இரும்பு கம்பி திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : நவ 12, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இரும்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 58; இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள தனது நிலத்தில், ஷீட் போட்ட கொட்டகையில், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை அடுக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல், கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

