/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டோவில் காஸ் கசிவு: கடலுாரில் திடீர் பரபரப்பு
/
ஆட்டோவில் காஸ் கசிவு: கடலுாரில் திடீர் பரபரப்பு
ADDED : ஆக 14, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ வில் காஸ் கசிவு ஏற் பட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த செல்லங்குப்பத்தில் இருந்து நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு முதுநகர் நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சிறிது துாரம் சென்ற போது, ஆட்டோவில் காஸ் கசிவு ஏற்பட்ட தால் திடுக்கிட்ட டிரை வர், ஆட்டோவை நிறுத்தி விட்டு, பள்ளி மாணவர்களை இறங்க செய்தார். பின், மாணவர்களை வேறு ஆட்டோ மூலம் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.