
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் உதய குமார் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில தலைவர் சையது அபுதாகீர், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவா சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வருவாய் துறையை சிறப்பு துறையாக அறிவித்து தலைமை செயலக ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் அனைத்து பணியிடங்களுக்கான பணியிட மாறுதல், கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை பணியாளர் குறைதீர்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பொருளாளர் பழனி நன்றி கூறினார்.