ADDED : டிச 26, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அனைத்து தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் ஷேக்தாவூத் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் சக்தி பிரபாகர் வரவேற்றார். சேர்மன் ஜெயந்தி, மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
நெல்லிக்குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும். பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல், கலைக்கல்லூரி அமைத்தல், முக்கிய சாலையில் விளக்குகள் எரியாததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஆசாத், சட்ட ஆலோசகர் ராம்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

