/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது தீட்சீதர்கள் ஒத்துழைப்பிற்கு பாராட்டு
/
பொது தீட்சீதர்கள் ஒத்துழைப்பிற்கு பாராட்டு
ADDED : அக் 28, 2025 06:00 AM
சிதம்பரம்: அக். 28-: தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொதுதீட்சிதர்கள் அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள, 108 திவ்யதேசங்களில் ஒன்றாக, திருச்சிற்ற கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 30 ஆண்டுகளுக்கு பின், வரும் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
சைவ -வைணவ சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கும்பாபிஷேகத்திற்காக பொது தீட்சிதர்கள் சார்பில் தலைக்காவிரியிலிருந்து புனித நீர் பூஜை செய்து நடராஜர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் பொது தீட்சிதர்கள் வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்குவது பாராட்டுக்குரியது, என தெரிவித்துள்ளார்.

