ADDED : டிச 01, 2024 04:44 AM

வேப்பூர் : வேப்பூர் அடுத்த நல்லூர் பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
பானுமதி அம்மாள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, நல்லூர் ஒன்றிய தி.மு.க., மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நல்லூர் பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, நல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., நிர்வாகிகள் அன்பழகன், மணிவேல் முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் மாரிமுத்தாள் குணா, ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பாபு, தனசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், நல்லூர் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த நோயாளிகள் பரிசோதனை செய்து கொண்டனர்.