
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., கல்விக்குழுமம், புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துக் கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கயல் நற்பணி சங்கம் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கயல் நற்பணி இயக்க தலைவர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் மனோகர், துணை செயலாளர் அதிசயகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சுந்தர்சிங் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் த.வீ.செ., கல்விக் குழும செயலாளர் செந்தில்நாதன் முகாமை துவக்கி வைத்தார்.
வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி டாக்டர் பாஸ்கர் சீனிவாசன் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர். 653 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 22 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 26 பேர் இருதய நோய் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வேல்முருகன், ஆரோக்கியசுந்தரம், தினகரன் செய்திருந்தனர். சங்க செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.