/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் 4 நாள் பொது பரிவர்த்தனை இயங்காது
/
ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் 4 நாள் பொது பரிவர்த்தனை இயங்காது
ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் 4 நாள் பொது பரிவர்த்தனை இயங்காது
ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் 4 நாள் பொது பரிவர்த்தனை இயங்காது
ADDED : ஜூலை 20, 2025 06:31 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் நான்கு நாட்கள் பொது பரிவர்த்தனைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருத்தாசலம் அஞ்சல் பிரிப்பகம் துணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை, அடுத்த தலைமுறை ஏ.பி.டி., செயலி வெளியிடுவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட செயலி, விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் வரும் 22ம் தேதி அமலுக்கு வருகிறது.
இதன் காரணமாக நேற்று முதல் வரும் 22ம் தேதி வரை விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் எந்தவித பொது பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது. தரவு இடம் பெயர்வு, அமைப்பு சரிபார்ப்புகள் மற்றும் உள்ளமைப்பு செயல்முறைகளை எளிதாக்க இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் அவசியம். இது புதிய அமைப்பு சீராகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்கிறது.
சிறந்த வேகமான மற்றும் டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சேவைகளை வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.