/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராட்சத குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு
/
ராட்சத குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு
ADDED : செப் 29, 2025 12:55 AM
கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே, குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீணாகியது.
கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே இரும்புக்குழாய் அமைக்கப்பட்டு கேப்பர் மலையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அது சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் சீரான நிலையில், நேற்று மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறியது.
இதனால் மாநகரின் ஒரு சில பகுதிகளில் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
குடிநீர் குழாய் உடைப்பிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.