நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சங்கரன் தலைமை தாங்கினார். ஆசிரியை சுந்தரி வரவேற்றார். சிதம்பரம் அஞ்சலக பி.ஆர்.ஓ., கோதண்டபாணி, பெண் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
அஞ்சலக ஊழியர்கள் சுபத்திரா, மாலதி, ஜீவிதா, கிருத்திகா, நர்மதா ஆகியோர், பெண் குழந்தைகளுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆசிரியை கண்மணி, மலர்விழி, வாசுகி பேசினர்.

